அரசு பள்ளிகளில் 4,5ம் வகுப்பு பாடப்புத்தகம் பற்றாக்குறை

ஈரோடு, ஆக.14: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு பாட புத்தகங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், காலாண்டு தேர்வு நெருங்கியும் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.தமிழகத்தில் நடப்பாண்டு அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 4, 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட வில்லை.

Advertising
Advertising

இந்நிலையில், காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பாட புத்தகங்களே வழங்காமல் தேர்வா? என மாணவ-மாணவிகள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எமிஸ் எண் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகம், நோட்டு வழங்கப்பட்டு விட்டது. புத்தகங்களும் எமிஸ் பதிவினை கருத்தில் கொண்டு தான் அரசு சார்பில் வழங்கப்பட்டது. எமிஸ் பதிவு விடுபட்டவர்களுக்கும், புதிதாக பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் கிடைக்காமல் இருந்திருக்கும். குறிப்பாக, மாநகராட்சி பள்ளிகளில் இப்பிரச்னை உள்ளது. புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் புத்தகங்கள் வழங்கப்படும் என்றனர்.

Related Stories: