கோவில்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி

கோவில்பட்டி, ஆக.14: கோவில்பட்டியில் தடுப்புசுவரில் ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியானார். கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரை சேர்ந்தவர் சந்திரன் மனைவி பேச்சியம்மாள் (65). இவர்களுக்கு 2 மகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியான ஐஸ்வர்யாவை, தாய் பேச்சியம்மாள் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து விட்டு, இருவரும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கோவில்பட்டி மாதாங்கோவில் ரோடு விலக்கில் வரும்போது, எதிர்பாராதவிதமாக சாலையின் மையத்தில் உள்ள தடுப்பு சுவரில் ஆட்டோ பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பேச்சியம்மாள் மீது ஆட்டோ கவிழ்ந்து கிடந்ததில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் கர்ப்பிணி ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Advertising
Advertising

தகவலறிந்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்த ஐஸ்வர்யாவிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து கோவில்பட்டி இலுப்பையூரணி லாயல்மில் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் மகன் தங்கமாரி (32) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: