பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.14: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பதினாறு ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் a26 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக பண பயன் அனைத்தும் வழங்குவதுடன் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும். கடையில் மதுபாட்டில் கையாளும்போது ஏற்படும் இழப்புக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பிரசார அணி செயலாளர் ஜாண்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சோபன், லால்குமார் உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சஜிக்குமார், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட ஆலோசகர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் சிவா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Related Stories: