விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை, ஆக. 11: ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், 13ம் தேதி மதுரை கிழக்கு வட்டார வளமையத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிழக்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஜோஸ்பின் ரூபி, ஷாஜஹான், மேற்பார்வையாளர் ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஊர்வலத்தில் சிறப்பு கல்வியாளர்கள் அருள் தேவபிரகாசம், சீனிவாசன், சிறப்புப்பயிற்றுனர்கள் உமா, ரேணுகா, வெற்றிச்செல்வி, பாண்டிச்செல்வி, சவுந்திர வடிவு, வெஸ்டல் ஜெரோபின் லியோனா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் பற்றிய விவரங்கள் பொதுமக்களுக்கு நேரடியாகவும் துண்டுத்தாள்கள் மூலமும் தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: