திண்டுக்கல்லில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஆக. 11: இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்துக்கள் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட மாட்டார்கள் என 1950ம் ஆண்டு ஆக.10ம் தேதி சட்டம் எழுதி கையெழுத்திட்டார். இந்த நாளை தலித் கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கருதி ஒவ்வொரு ஆண்டும் ஆக.10ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே திண்டுக்கல் மறைமாவட்ட எஸ்சி, எஸ்டி பணிக்குழு, பொதுக்குழு, கண்காணிப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகிக்க, தூய வளனார் பேராலயம் வட்டார அதிபர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். பணிக்குழு செயலாளர் வின்சென்ட் கமலக்கண்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் குழந்தை நாதன், திண்டுக்கல் தொழிலாளர் நல பணிக்குழுசெயலர் பிலிப் சுதாகர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி, எஸ்டி பட்டியலில் இணைக்குமாறு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: