ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஜூலை 23:ரேஷன் கடை ஊழியர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணிவரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுக்கு அறிக்கையும் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நியாய விலைக்கடை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு எவ்வித அறிவிப்பும் வழங்காததை கண்டித்து நேற்று கடலூரில் தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்தில் உள்ள ரேஷன் கடைகளை ஊழியர்கள் மூடி சென்றதால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். கடலூர்: கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் துரை சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

Related Stories: