ஏரல் தாசில்தார் பொறுப்பேற்பு

ஏரல், ஜூலை 23:  ஏரல் தாசில்தாராக இருந்துவந்த காளிராஜ்,  டாஸ்மாக் கிட்டங்கி மேலாளராக பணியிட மாறுதலாகி சென்றார். இதையடுத்து புதிய  தாசில்தாராக நியமிக்கப்பட்ட அற்புதமணி, ஏரல் தாலுகாவின் முதல் பெண்  தாசில்தாராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மண்டல துணை தாசில்தார்  சேகர், தேர்தல் துணை தாசில்தார் முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர்  கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆர்.ஐ, விஏஓக்கள், கிராம உதவியாளர்கள், அலுவலர்கள்  வாழ்த்துத் தெரிவித்தனர்.

Related Stories: