நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும்விழா

நாசரேத், ஜூலை 23: உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில்  மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. வேதியியல் துறை சார்பில் நடந்த இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ஜேனட் சில்வியா ஜெப ரோஸ் முன்னிலை வகித்தார். இதையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்ற துறை மாணவ, மாணவிகள், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  விழாவில் பேராசிரியைகள் ஜீவிஎஸ்தர், சுதா பிலோமினா, பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலாளர் எஸ்.டி.கே ராஜன், முதல்வர் அருள்ராஜ், பேராசிரியர் ஜெபஸ்டின் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: