புதுச்சத்திரம் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேந்தமங்கலம், ஜூலை 18: புதுச்சத்திரத்தில், வடக்கு ஒன்றிய திமுக சார்பில், மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரசன் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி சின்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள், கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டோர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: