பவானி ஆற்றில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

சத்தியமங்கலம், ஜூலை 18:  பவானிசாகர் அருகே உள்ள புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (54). விவசாய கூலி தொழிலாளி. இவரின் மனைவி கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது மகன் ராமகிருஷ்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அன்பழகன் தனது மகனிடம் பவானி ஆற்றிற்கு மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. ராமகிருஷ்ணன் தனது தந்தை அன்பழகனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பவானிசாகர் அருகே காராச்சிக்கொரை பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஆண் பிரேதம் மிதப்பதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நீரில் மதிந்த உடலை மீட்டு, நடத்திய விசாரணையில் இறந்தவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன அன்பழகன் என்பது தெரிய வந்தது.

Advertising
Advertising

Related Stories: