விண்ணப்பிக்க அழைப்பு திருத்துறைப்பூண்டி நகரில் குப்பை கொட்டும் இடங்களில் ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி, ஜூலை 18: திருத்துறைப்பூண்டி நகர்பகுதியில் உள்ள கடை வீதிகள் குடியிருப்புகளின் அருகில் குப்பைகளை கொட்டாமல் நிறுத்தி வீடுதோறும் தினசரி உற்பத்தியாகும் குப்பைகளை ஈரக்கழிவுகள், உலர்கழிவுகள், வீட்டு அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து வழங்கிட உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நகரின் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நகரின் ஒரு சில இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டன. அப்பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பை கொட்டும் இடங்களில் அழகிய ரங்கோலி போட்டு தூய்மையாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் இங்கு குப்பை கொட்டாதீர்கள் என எழுதி ரங்கோலி வரைந்து நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இச்செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: