கோட்டூர், கொரடாச்சேரி ஒன்றியங்களில் மர்மநபர்களின் சதி செயலை தடுக்க நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் 2 கண்காணிப்பு கேமரா அமைப்பு

நீடாமங்கலம், ஜூலை 18: நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயில்களை கவிழ்ப்பதற்கு நடக்கும் சதி செயல்களை தடுப்பதற்காக 2 கண்காப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலைய தண்டவாள டிராக்கில் சுமார் 4 முறையும் தஞ்சை மார்க்கம், நாகை மார்க்க பகுதி தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தனர். பிறகு இருபுறமும் நீடாமங்கலம் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கேமரா பழுதடைந்தது. இந்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளிவந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு நாகை மார்க்க தண்டவாள டிராக்கில் மர்ம நபர்களால் கற்கள் வைக்கப்பட்டது. அப்போது கேமரா பழுதடைவில்லை என்றால் கற்கள் வைத்த மர்ம நபர்கள் சிக்கியிருப்பார்கள் என தினகரனில் செய்தி வெளிவந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னும் மர்ம நபர்கள் நாகை மார்க்க தண்டவாள டிராக்கில் இரவு 9 மணியளவில் மன்னார்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயில் வந்தபோது பெரிய பாராங்கற்களை வைத்து ரயிலை கவிழ்க சதி செய்தனர். இதனையறிந்த இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்த தகவலின்பேரில் பாரங்கல் அகற்றப்பட்டது. இந்த செய்தியும் நாளிதழ்களில் வெளியானது. கண்காணிப்பு கேமரா வைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது எனவும், கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் எனற செய்தி தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியால் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அருகில் உள்ள லோ பிரிட்ஜ் நாகை மார்க்க தண்டவாளம் அருகில் ஒரே கம்பத்தில் விலை உயர்ந்த இரண்டு கண்காணிப்பு கேரமாக்கள் ரயில்வே சார்பில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் கண்டறியப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: