அரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு

ஈரோடு, ஜூலை 16: ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் தங்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் கடை, கடையாக சென்று பணம் வாங்கி வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களுக்கு யாரும் வேலை தர மறுக்கிறார்கள். இதனால் நாங்கள் பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். அரசு அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு ஏதாவது ஒரு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: