ரூ.1.39 கோடிக்கு வேளாண் பொருட்கள் விற்பனை

அந்தியூர், ஜூலை 16:  ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை விவசாய விளை பொருட்கள் ஏலம் நடப்பது வழக்கம். நேற்று நடந்த ஏலத்தில்  6500 பருத்தி மூட்டை ஏல விற்பனைக்கு வந்தது. கிலோ குறைந்தபட்சம் ரூ.55.19 முதல் அதிகபட்சமாக ரூ.63.33 வரை  என மொத்தம் ரூ.1.35 கோடிக்கு விற்பனையானது. 20 ஆயிரம் தேங்காய் ஏலத்துக்கு வந்ததில் சிறிய தேங்காய் ரூ.4.50 முதல் பெரிய தேங்காய் ரூ 13.30 வரை என ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்திற்கும்,  தேங்காய் பருப்பு 103 மூட்டை விற்பனைக்கு வந்ததில் கிலோ குறைந்தபட்சம் ரூ.70.29 முதல் ரூ.85.89 வரை என ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும், 8 எள் மூட்டை கிலோ குறைந்தபட்சம் ரூ.107.29 முதல்  அதிகபட்சமாக ரூ.117.29  வரை என ரூ.40 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மொத்தம் வேளாண் விளைபொருட்கள் ரூ.1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனையானது. அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்தாணி, சின்னத்தம்பி பாளையம் மைக்கேல் பாளையம், செல்லம் பாளையம், பச்சாபாளையம், செம்புளிச்சாம் பாளையம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைபொருட்களை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனர். கோவை, திருப்பூர், அவிநாசி, பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இவற்றை வாங்கி சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: