ஆணவ படுகொலை தடுத்திட தனிச்சட்டம்

மதுரை, ஜூலை 16: ஆணவ படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றக்கோரி மதுரையில் ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பேரவை தலைவர் அதியமான் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு, அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
Advertising
Advertising

Related Stories: