மாவட்டம் கிரானைட் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்

மதுரை, ஜூலை 16: தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் ராஜசேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் ‘மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் கிரானைட் மீது அறிக்கை கொடுத்ததில் இருந்து கிரானைட் தொழில் முடங்கியுள்ளது. அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் ரூ.பல கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிறகு வந்த கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் இதன்பேரில் அறிக்கை கொடுத்தார். எனவே கிரானைட் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், அரசை கண்டித்து பல முறை மனுக்கள் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடனே வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, கிரானைட் தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: