காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்+

தூத்துக்குடி, ஜூலை 16: தூத்துக்குடி, திருச்செந்தூர், செட்டிக்குறிச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  அகில இந்திய நாடார் மக்கள் பேரவை சார்பில், காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதில் அனைத்து நாடார் ஐக்கிய சங்க மாவட்ட தலைவர் லிங்கசெல்வன் நாடார், செயலாளர் ராமசாமி நாடார், பொருளாளர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

தொடர்ந்து கேம்ப்2 பகுதியில் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்த விழாவில் காமராஜர் படத்திற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முக்காணியில் அகில இந்திய நாடார் மக்கள் பேரவை பொதுச்செயலாளர் சதீஷ்குமார், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில், அவரது படத்துக்கு திருச்செந்தூர் சப்-கலெக்டர் பிரியா மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் ராம்சங்கர், கல்வி புரவலர் ராமநாதன், நூலக புரவலர் மகாவிஷ்ணு, நூலகர் மாதவன், தமிழக மாணவர் இயக்க செயலாளர் சிவநேசன், கலாம் சட்ட அலுவலக வழக்கறிஞர்கள் பிரகாஷ், ஜெபராஜ், சூசை, மற்றும் மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மதன்ராஜ், பொருளாளர் விஜி, தென்மண்டலம் அமுதாமெஸ் பட்டு, தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய தொழிலாளரணி கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் (பொறுப்பு) சங்கரி நன்றி கூறினார்.

கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நாடார் இளைஞர் அணி சார்பில் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. நாடார் சமுதாய சங்க கட்டிடத்தில் நடந்த விழாவில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செட்டிக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவுக்கு பொன்மாரியப்பன் தலைமை வகித்தார். தேவசகாய பவுன் முன்னிைல வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் பேராசிரியர் பெரியாரடியான், மாவட்ட செயலாளர் முனியசாமி, துணை செயலாளர் ஆழ்வார் கலந்து கொண்டனர். பால்ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார். நாடார் இளைஞர் அணி தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

வான்கோழி வளர்ப்பு

நமது கிராமங்களில் விவசாயிகள் வீட்டு தோட்டங்களில் வான்கோழி வளர்ப்பது இயல்பான ஒன்றாகும். வீடுகளில் உள்ள நெல், அரிசி, குருணை, சோளம், தவிடு, சமையல் கழிவுகளே வான் கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் வான்கோழிகளுக்கு தானியங்கள், கீரைகள் போதிய அளவு கிடைத்துவிடும். ஆனால் புரதச்சத்து தேவையான அளவு கிடைக்காது. அதற்கு கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை தண்ணீரில் ஊற வைத்து சிறிதளவு தவிடு கலந்து கொஞ்சம், கொஞ்சமாக தீவனமாக தரலாம்.

வியாபார முறையில் வான்கோழிகள் வளர்த்தால் பண்ணை அமைப்பதே நல்லது. ஒரு ஆண் வான்கோழிக்கு கொட்டகையில் 5-6 சதுர அடியும்,  பெண்கோழிக்கு சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட, 20 ஆண் வான்கோழிகள் கட்டாயம் தேவையாகும். இந்த கொட்டகையை சுற்றிலும் சுமார் ஒரு ஏக்கர் நிலபரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல்பூண்டுகள், களைகளை ஓரிரு நாட்களில் தின்று விடும். எனவே அந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து இடலாம். கலப்பு தீவனம் தினமும் 2 அல்லது 3 முறை அளிப்பது நல்லது. வான்கோழிகள் முட்டைகள் மூலமும், குஞ்சுகள் விற்பனை மூலமும் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

வாழை சாகுபடியில் அதிக மகசூல்

தனது அனைத்து பாகங்களையும் பலவிதமான பயன்பாடுகளுக்கும் விளைவித்து கொடுப்பதுதான் வாழை. வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற்றிட விவசாயிகள் சிலவற்றை பின்பற்றியாக வேண்டும். வாழையில் களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு செய்யலாம். தட்டை பயிரை வாழையில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். இவற்றின் அதிவேக வளர்ச்சி வெளிச்சம் மண்ணில் படாமல் சூழ்ந்து கொள்ளும். இதன்மூலம் மகசூல் பெறுவதோடு, பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து கொள்ளலாம்.

வாழையில் உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக மேற்கொள்ளலாம். இதை தவிர பாகல், பீர்க்கன் போன்ற கொடி வகைகளையும் ஊடுபயிராக பயிரிட்டு மகசூல் பெற்றிடலாம். வாழைக்கு மூடாக்கு செய்யும் நிலமானது நல்ல வடிகால் கொண்டதாக இருக்க வேண்டும். அளவான ஈரப்பதம், நல்ல கற்றோட்டம் ஆகியவை மண்ணில் பொலபொலப்பு தன்மையை ஏற்படுத்தும். இவற்றால் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகரிப்பதோடு, கரையான்கள் மூடாக்குகளை உணவாக பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும். மண்புழுவும் அதிகளவில் உருவாகி இயற்கையான மண்ணின் தன்மையை நிலைநிறுத்தும். இதன்மூலம் வாழையால் மட்டுமின்றி ஊடுபயிர்களாலும் அதிக மகசூல் ஈட்ட முடியும்.

(செவ்வாய்க்கிழமைதோறும்)

Related Stories: