தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ஜூலை 12: ஈரோடு அருகே நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்தியூர் அடுத்துள்ள குருவரெட்டியூர் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன் (39). இவருக்கு, கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அழகேசனின் நடவடிக்கை பிடிக்காமல் மனைவி கவிதா, தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால், அழகேசன் சித்தோடு அருகே உள்ள பாலக்காட்டூர் தோட்டம் பழனிசாமி என்பவரது வீட்டில் தங்கி, தறிப்பட்டறையில் பணியாற்றி வந்தார். இந் நிலையில், நேற்று முன்தினம் பட்டறைக்கு அழகேசன் வேலைக்கு வராததால் சந்தேகம் அடைந்த தறிப்பட்டறை உரிமையாளர் பழனிசாமி, அழகேசன் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Advertising
Advertising

இதுகுறித்து பழனிசாமி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: