ஆசிரியர்களுக்கு பணி நிரவல் உத்தரவு

மதுரை, ஜூலை 11: மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், மாவட்டத்திற்குள் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நேற்று காலையில் நடந்தது. இதில் எம்.கல்லுப்பட்டி பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர், சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், எம்.சத்திரப்பட்டி பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியை சாகிரா பேகம், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் பணிநிரவல் பெற்றனர்.

இதேபோல், பிற்பகலில் ஒன்றிய அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடந்தது. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஒச்சுக்காளை, மதுரை மேற்கு ஒன்றியம் சிக்கந்தர்சாவடி அரசு நடுநிலைப்பள்ளிக்கும், மதுரை கிழக்கு ஒன்றியம் சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய அருணாசலத்தம்மாள், செல்லம்பட்டி ஒன்றியம் சிந்துபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் பணிநிரவல் பெற்றனர். இவர்களுக்கு பணிநிரவல் உத்தரவை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழங்கினார். பிற்பகலில் நடைபெறுவதாக இருந்த ஒன்றிய அளவிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், சென்னையில் இருந்து கவுன்சிலிங் இணைப்பு கிடைக்காததால், பல மணி நேரம் தாமதமாக மாலையில் நடந்தது. ஆசிரியர் இடமாறுதல் நடந்தையடுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது
Advertising
Advertising

Related Stories: