அம்மாப்பேட்டை விவசாயிகள் அட்மா திட்ட கல்வி சுற்றுலா

பாபநாசம், ஜூன் 27: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்ட கல்வி சுற்றுலா நடந்தது. மகிமாலை, ஒன்பத்துவேலி, மலையர்நத்தம், திருக்கருக்காவூர், சூழியக்கோட்டை, அருந்தவபுரம், பூண்டி, விழுதியூர், இடையிருப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகளுக்கு கால்நடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆடு, கோழி வளர்ப்பு குறித்த கல்வி சுற்றுலாவுடன் கூடிய பயிற்சி, சிக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது. மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர் முத்துக்குமார் பங்கேற்று புதிய நாட்டுகோழி ரகங்களான நாமக்கல் கோழி 1, கடக்நாத் போன்றவற்றின் வளர்ப்பு முறை குறித்து எடுத்துரைத்தார். மேலும் குறைந்த நாட்களில் அதிக உடல் எடை கூடும் வெள்ளாட்டு இனங்களான மேச்சேரி, தலைச்சேரியை போன்றவற்றை கொட்டில் முறையில் வளர்த்து அதிக லாபம் ஈட்டுவது குறித்து எடுத்துரைத்தார். பின்னர் வேளாண் அறிவியல் மையத்தில் செயல்படுத்தப்படும் புதிய மீன் குஞ்சுகள் உற்பத்தி, அசோலா உற்பத்தி, தென்னை நார்கழிவு மக்கு உரம், மண்புழு உரம், நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றை விவசாயிகள் பார்வையிட்டனர்.

Related Stories: