3 கிமீ சுற்றி செல்லும் நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷேர் ஆட்டோ

திருக்கழுக்குன்றம், ஜூன் 27: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், இருளர் இன பிள்ளைகள் அரசு பள்ளிக்கு சென்றுவர, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இலவச ஷேர் ஆட்டோ வழங்கப்பட்டது.திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சி, காரைத்திட்டு கிராமத்தில் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில், இருளர் குடியிருப்பில் இருந்து இருளர் இன குழந்தைகள்  20 பேர் படிக்கின்றனர்.

ஆனால், இருளர் குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் சுமார் 3 கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.இதையொட்டி, மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பள்ளியின் பெற்றோர்  ஆசிரியர் கழக தலைவர் கிங் உசேன், தனது சொந்த செலவில் காலை மற்றும் மாலை வேளைகளில், அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஒரு ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதில் மாணவர்கள் சிரமமின்றி  பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

Related Stories: