அல் அமீன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு, ஜூன் 26: ஈரோடு அல் அமீன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் தாளாளர் அல்ஹாஜ் ஜபருல்லா தலைமை வகித்தார். கல்லூரி துணை தலைவர் அல்ஹாஜ் ஏ இஸ்கந்தர், கல்லூரி முதல்வர் கமால்பாட்சா ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றினர். இதில் கல்லூரி ஆயுட்கால உறுப்பினர் அல்ஹாஜ் ஏ சாகுல் ஹமீது, அல்ஹாஜ் அஹமது ஹாலித், அல்ஹாஜ் முஹம்மது யாஸிர், அல் அமீன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முகம்மது ஜூபைர் ரஹ்மான், பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத்தலைவி விஜயலட்சுமி, துணை முதல்வர் இக்பால் மன்சூர் பாட்சா, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: