கறம்பக்குடி, ஜூன் 25: கறம்பக்குடியில் திமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு தெற்கு ஒன்றியத்தில் திமுக தலைமை கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம், நகரம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் திமுக தலைமை கழகம் மூலம் நியமிக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கலந்து கொண்டு திமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.