ஆண்டிபட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டி கோயிலில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி, ஜூன் 21:  ஆண்டிபட்டி பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் மழை பெய்ய வேண்டி அரசமர செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த சில வருடங்களாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் மழை பெய்ய வேண்டி கிராமங்ளில் குலதெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி நகரில் உள்ள அரசமர செல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று  நடைபெற்றது. .இவ்விழாவை முன்னிட்டு முதல் கால பூஜைகளான யாகசாலை பூஜை , விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை , கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் , தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள்  நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: