மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஆண்டிபட்டி, ஜூன் 21: தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் நேற்று ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் ஊராட்சியில் மத்திய அரசின்  மாற்றுத்திறனாளிகளுக்கான  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான  முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.போடிதாசன்பட்டி, அனுப்பப்பட்டி, ஏத்தகோயில் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் 70 பேர் மனுக்களை வழங்கினர். மேலும் முகாமில் மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு (அட்டை) வழங்கப்படுவதற்காக மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றனர். சுகாதார ஆய்வாளர்  பிரபுராஜா , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மகளிர் திட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: