திருப்புவனம் கூட்டுறவு சங்க தலைவராக சேங்கைமாறன் போட்டியின்றி தேர்வு

திருப்புவனம், ஜூன் 19:  திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்தாண்டு மே 24ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் ஒரு அணியும், தமாகா  மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். சங்கத்தின் எல்லைகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடி ஏற்பட்டது  குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில்  14ம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. தேர்தல் அலுவலர் சித்ரா, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் புஷ்பலதா ஆகியோர் தலைமையில் வாக்கு எண்ணும் பணி நடந்தது.  இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் போட்டியிட்ட 11 பேரில் 9 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா தேர்தலை நடத்தினார். ஒன்பது இயக்குநர்கள் பங்கேற்றனர்.  தலைவராக சேங்கை மாறனும், துணைத் தலைவராக தேளியை சேர்ந்த பழனியம்மாளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சித்ரா வழங்கினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஏராளமான திமுகவினர்  சால்வை, மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: