தாகம் தீர்க்கும் தண்ணீர் பழம்... காலிப்பணியிடங்களால் கதறும் தேனி வேளாண் விற்பனைத்துறையில் ஒரு அதிகாரிக்கு ஏழு பொறுப்பு

தேனி, ஜூன் 18: தேனி வேளாண் விற்பனைத்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், ஓரு அதிகாரி ஒரே நேரத்தில் ஏழு பொறுப்புகளை கவனிக்கும் இக்கட்டான நிலை நிலவி வருகிறது. தேனி மாவட்ட வேளாண் விற்பனைத்துறையில் கடந்த ஜூன் மாதம் சிலர் ஓய்வு பெற்றனர். பலர் பதவி உயர்வில் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். ஏற்கனவே காலிப்பணியிடங்கள் அதிகமாக இருந்த நிலையில் பணி ஓய்வு, பதவி உயர்வு காரணமாக மாவட்ட வேளாண் விற்பனைத்துறையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இருக்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரே அதிகாரி ஏழு பொறுப்புகளை கவனிக்கிறார். தேனி, சின்னமனூர், போடி, கம்பம் தேவாரம் ஆகிய ஐந்து உழவர்சந்தைகளின் நிர்வாகம், அக்மார்க் துணை வேளாண்மை அலுவலர் பொறுப்பு, வேளாண் வணிகம் துணை வேளாண்மை பொறுப்பு ஆகிய ஏழு பொறுப்புகளை ஒரே அதிகாரி கவனிக்க வேண்டும் என பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேனி மாவட்ட வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, ‛தேனி மாவட்ட வேளாண்மைத்துறையில் சமீபத்தில் தான் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் சில தினங்களாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு வேளாண்மைத்துறைக்கு தற்போது 600 பேரை பணி நியமனம் செய்ய உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால், இந்த சிக்கல் முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு கூறினர்.

Related Stories: