விண்ணப்பிக்க அழைப்பு கோட்டூர் அருகே சேதமடைந்த பன்னியூர் பாலம் சீரமைக்கப்படுமா?

மன்னார்குடி, ஜூன்18: கோட்டூர் ஒன்றியம் அக்கரைக்கோட்டகம் அருகே பன்னியூர் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் அக்கரைக்கோட்டகம் ஊராட்சி பன்னியூர் கிராமத்தில் கறம்பக்குடி வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக செல்லத்தூர், கறம்பக்குடி, சந்தான நல்லூர், அக்கரைக் கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் திருக்களர் வழியாக மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். மேலும் கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர தேவை க்கு மருத்துவமனைக்கு செல்லவும் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண் டும்.இந்நிலையில் இந்த பாலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வலுவிழந்து உடைந்து விட்டது. பாலம் உடைந்துள்ளதால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் சிரமம் உள்ளது.இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பாலத்தை கடக்க முடியாமல் கீழே இறங்கி வாகனத்தை தள்ளி கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த உடைந்த பாலத்தை சீரமைக்க உரிய அதிகாரிகளிடம் பல முறை மக்கள் மனுக்கள் கொடுத்ததும் பலனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உடன் தலையிட்டு பழுதான பாலத்தை போர்க் கால அடிப்படையில் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: