கடியாச்சேரி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 2: திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுக்காக சுமார் 2 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த பள்ளிவாசலின் நிர்வாக குழுவாக முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மன்றத்தின் ஏற்கனவே இருந்த பொறுப்பாளர்களின் காலம் 2024-மார்ச் மாதத்துடன் நிறைவடைந்து விட்டபடியால் புதிய நிர்வாகிகள் தேர்வு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் மன்ற முன்னாள் நிர்வாகிகள்சம்சுதீன், ஷேக்முகைதீன், மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது புதிதாக 2024-26 ம் ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பின் வருமாறு, தலைவராக ஷேக் தவூது, செயலாளராக அப்துல் காதர், பொருளாளராக ரஹ்மத்துல்லா, துணைத் தலைவராக ஜாகிர் உசேன், துணை செயலாளராக ஜெகபர் சாதிக் ஆகியோர் ஏகமானதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் 2024 ஜூன் முதல் தொடங்கி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 2026 மார்ச் வரை இருக்கும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டிக்கு ஜமாத் மன்ற முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post கடியாச்சேரி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: