சிறை கைதிகளுக்கு யோகா பயிற்சி

கோவை, ஜூன் 14:ேகாவை மத்திய சிறையில் 1821 கைதிகள் உள்ளனர். விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சிலர் விரக்தி, மன உளைச்சல் காரணமாக உடல் பாதிப்பில் இருப்பதாக தெரிகிறது. கவலை, வேதனையில் உள்ள கைதிகள் சிலர் ரத்த அழுத்த பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றனர். சிறை மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் நோய் பாதிப்பில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்த போதிலும், மாரடைப்பு, சர்க்கரை நோய் உட்பட பல்வேறு காரணங்களால் கைதிகள் இறப்பது தொடர்கிறது. கைதிகளின் மன நிலையை மாற்ற, அவர்கள் உடல் மன நிலையை நன்றாக வைத்து ெகாள்ள யோகா, தியான பயிற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டில் 540 பேருக்கு பயிற்சி தரப்பட்டது. நடப்பாண்டில் தண்டனை கைதிகள், குறிப்பாக ஆயுள் தண்டனை கைதிகளுக்கு யோகா பயிற்சி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: