மேலூரில் கோயில் திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் பரவசம்

மேலூர், ஜூன் 13: மேலூர் சிவன் கோயில் அருகிலுள்ள துரோபதையம்மன் கோயில் திருவிழா மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலூர் நகர் மட்டுமல்லாது பல்வேறு கிராமமக்களும் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். மே 24ல் திருக்கல்யாணம், 29ல் பீமன்கீசன் வேடம், ஜூன் 4ல் சக்கரவியூக கோட்டை, 7ல் அர்ச்சுணன் தவசும் நடைபெற்றது. தொடர்ந்து 9ல் கூந்தல் விரிப்பு, 10ல் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சள் நீராட்டுடன் இன்று திருவிழா நிறைவு பெறவுள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: