லாரி மோதி வாலிபர் பலி

பெரம்பூர்: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் ஏ தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஸ்ரீராம் (20). மாதவரம் சின்னமாத்தூர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நிதீஷ் குமார் (20). இருவரும் நண்பர்கள். தரமணி டைடல் பார்க்கில் ஹவுஸ் கீப்பிங் தொழிலாளிகள். நேற்று மதியம் தண்டையார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் வீட்டில் இருந்து இருவரும் ஒரே பைக்கில் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி நோக்கி சென்றனர். கொடுங்கையூர் சிட்கோ நகர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் செல்லும்போது கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பை கொட்டிவிட்டு மூலக்கடை நோக்கி வந்த லாரி திடீரென பைக்கின் மீது மோதியது.

Advertising
Advertising

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் நிதிஷ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஸ்ரீராமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து ஸ்ரீராமை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: