தொழில் அதிபர் வீடு சூறை காவலாளி மீது தாக்குதல்

கோவை, ஜூன் 13: கோவையில் தொழில் அதிபர் வீட்டை சூறையாடி காவலாளி மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் கோவையில் கார் விற்பனை மையம் நடத்தி வருகிறார். இவரிடம், கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேரந்த பைனான்ஸ் அதிபர் தாமோதரன் ரூ.4 கோடி கடன் வாங்கி இருந்தார். கடனை தாமோதரன் திருப்பி கொடுக்க வில்லை. பணத்தை திருப்பி கொடுக்குமாறு அற்புதராஜ், தாமோதரனிடம் பல முறை கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அற்புதராஜ். தனது நண்பர்களிடமும் கூறி உள்ளார். இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த தாமோதரன், நேற்று முன் தினம் காரில் 4 பேருடன் அற்புத ராஜ் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வெள்ளலூரை சேர்ந்த காவலாளி ரங்கநாதன்(71), அங்கு வந்த 4 பேரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அக்கும்பல், அவரை தாக்கி உள்ளனர். பின்னர் வீடு புகுந்து யாரும் இல்லாததால் அங்கிருந்த சிசிடிவி கேமரா, மின்ஒயர், சேர், நாற்காலி, பூந்தொட்டி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பினர். இது குறித்து காவலாளி ரங்கநாதன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார், கொலை மிரட்டல், தாக்குதல், உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அக்கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: