மதுரை காமராஜர் பல்கலையில் நாட்டு புறவியல் துறையில் சேர்ந்த முதல் திருநங்கை

திருப்பரங்குன்றம், ஜூன் 12: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள நாட்டு புறவியல் துறை முதுகலை பட்டப்படிப்பிற்கு தற்போது கலந்தாய்வு முறையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டம், விராலூரை சேர்ந்த திருநங்கை வர்ஷா என்பவர் தேர்வாகிமுதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இதற்கு முன்பு இவர் திருச்சி நேஷனல் கல்லூரியில் பிபிஏ படித்தவர் ஆவார். நாட்டுப்புற கலைகள் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படிப்பை தேர்ந்தெடுத்ததாக வர்ஷா தெரிவித்தார். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தனர் கிருஷ்ணன் கூறுகையில், ‘நாட்டு புறவியல் படிப்பு பயிலும் முதல் திருநங்கை வர்ஷா தான். திருநங்கைகள் தங்களை முன்னேற்றி கொள்ள இவரை போல் துணிச்சலாக கல்வி கற்க முன் வர வேண்டும். இவருக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

Related Stories: