எத்தனை டெக்னாலஜி வந்தாலும் இப்படித்தானா? சிறுவர்களை கஞ்சா விற்க பயன்படுத்தும் கும்பல்

மதுரை, ஜூன் 12: மதுரையில் 200க்கும் மேற்பட்ட சிறு கஞ்சா வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பெரிய வியபாரிகளிடம் இருந்து கஞ்சாவை பெற்று, அதனை சிறுசிறு பொட்டலங்களாக போடுகின்றனர். பெரும்பாலான ஸ்டேஷன்களில் மாமூல் பெற்றுக்கொண்டு கஞ்சா விற்க போலீசார் அனுமதிக்கின்றனர். ஆனால் கஞ்சா வழக்குகள் போட்டுள்ளதாக உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுவதற்காக சிலரை பிடித்து கஞ்சா கடத்தியதாக வழக்கு போடுகின்றனர். ஒரு சில உண்மையான கஞ்சா வியாபாரிகளையும் அவ்வப்போது கைது செய்கின்றனர். இந்நிலையில் கீரைத்துறை போலீசார், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 17வயது நிரம்பிய சிறுவனை பிடித்து பையை சோதனையிட்டனர்.

அதில் 1 கிலோவிற்கு மேல் கஞ்சா இருந்துள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த கும்பலே கஞ்சாவை விற்க செய்த பகீர் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘என்னை அடையாளம் தெரிந்து வரும் வாடிக்கையாளர்களிடம் கஞ்சாவை கொடுத்து பணம் பெற்றுக்கொள்வேன். எனக்கு தினமும் பணம் கிடைக்கிறது. மேலும் சிறுவன் என்பதால் யாருக்கும் என்மேல் சந்தேகம் வரவில்லை’ என்று போலீஸ் விசாரணையில் சிறுவன் தெரிவித்துள்ளார். சிறுவர்களை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தும் கும்பலை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கையில் மதுரை போலீஸ் கமிஷனர், மாவட் எஸ்பி, கூடுதல் கவனம் காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: