மானாவாரி நிலத்தில் சிறுதானியம் பயிரிட பயிற்சி

காளையார்கோவில், ஜூன் 12:  நெல்லுக்கு மாற்றாக மானாவாரி நிலத்தில் சிறுதானியம் விவசாயம் செய்வது குறித்து திறன் ஆய்வு பயிற்சி நடைபெற்றது. காளையார்கோவில் வட்டார வேளாண்மை அலுவலகம் சார்பாக திறன் வளர்த்தல் பயிற்சி மற்றும் கிராமப்புற கூட்டம் குறித்து விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஆலவிளாம்பட்டி கிராமத்தில் நடந்தது. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் வேளாண்துறை சார்பாக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் காளையார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட 6 பஞ்சாயத்துகளில் 1000 எக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலத்தில் நெல்லுக்கு மாற்றாக மானாவாரி பயிர்களான சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். தொடர்ந்து காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் நெப்போலியன், மானாவாரி வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக ஆலவிளாம்பட்டி கிராம விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்களான குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுதல் நுழைவு கட்டப்பணிகள், நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக  எடுத்து  கூறினார். ‘மேலும் இந்நிகழ்ச்சியில் காளையார்கோவில் வேளாண்மை அலுவலர்  செந்தில்நாதன், கோடைகால விவசாயம் செய்வது குறித்து மற்றும் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சௌமியா, ஜெயசுதா, செல்வம், சரவணகுமாரி மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கோகிலா, முத்துசரண்யா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: