எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள்

பரமத்திவேலூர்,  ஜூன் 12: பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை  வைக்காமல் ஊழியர்கள் மராமத்து பணிகளை நேற்று மேற்கொண்டனர். நாமக்கல்  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.   பரமத்திவேலூர் பகுதியில் பெய்த மழையால் கரூர் -நாமக்கல் தேசிய  நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் புற்கள் மற்றும் செடிகள்  முளைத்துள்ளது. மேலும், சாலையில் மணல் தேங்கி உள்ளது. இதையடுத்து தேசிய  நெடுஞ்சாலையை பராமரித்து வரும் நிறுவனத்தின் சார்பில், 10க்கும்  மேற்பட்ட ஆண், பெண்கள் மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று  காலை சாலையோரம் மணல் அள்ளும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். ஆனால், பணி  நடைபெறும் இடத்தில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்ற எந்த  ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. இதனால், வாகனங்கள் வழக்கம் போல சாலையில்  சென்றன. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, சாலைப்பணி நடைபெறும் இடத்தில்  அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: