விரைவில் திறக்க மக்கள் வலியுறுத்தல் துறையூரில் ஜமாபந்தி

துறையூர், ஜூன் 12: துறையூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துறையூர் தாசில்தார் பிரகாஷ், மண்டல துணை தாசில்தார்கள் செல்வி, தனலட்சுமி, தேர்தல் தாசில்தார் ஆனந்த், சமூக நலத்துறை தாசில்தார் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் அலுவலர்கள் செங்காட்டுப்பட்டி அய்யப்பன், உப்பிலியபுரம் மோகன், கொப்பம்பட்டி ராதா, கண்ணனூர் ஜெசிமேரி, சர்வேயர்கள் முத்துலட்சுமி, சண்முகராஜா ஆகியோர் தஸ்தாவேஜிகளை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விஏஓ தளுகை சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முதல் நாளில் கொப்பம்பட்டி வருவாய் பகுதியை சேர்ந்த தளுகை, வைரிசெட்டிப்பாளையம், கொப்பமாபுரி, காரப்புடையான்பட்டி, சோபனபுரம், தென்பரநாடு ஆகிய 7 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு வருவாய்த்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். பொதுமக்களிடமிருந்து ஆர்டிஓ ரவிச்சந்திரன் 158 மனுக்களை பெற்றார். இதில் உடனடியாக 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதி 73 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: