மக்கள் எதிர்பார்ப்பு திருத்துறைப்பூண்டி- சென்னைக்கு திருவாரூர் வரை இணைப்பு ரயில் சேவை

திருத்துறைப்பூண்டி, ஜூன்12: திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு திருவாரூர் வரை இணைப்பு ரயில் சேவையை துவங்க வேண்டும் என ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் ஜூன்.1ம் தேதி முதல் மீண்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.சென்னை செல்வதற்கான விரைவு ரயில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது.அதுவரை திருத்துறைப்பூண்டியிலிருந்து இணைப்பு ரயில் சேவையினை திருவாரூர் வரை உடனேஇயக்கிட திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தில் சார்பில் கோரிக்கை அளித்துள்ளனர்.சங்கத் தலைவர் தலைவர் வக்கீல் நாகராஜன், சங்க செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்வதற்கு ரயில் சேவைஇயக்கப்படவில்லை. சென்னைக்கு ரயிலில் செல்லவேண்டுமென்றால் பேருந்து பயணமாகத்தான் செல்லவேண்டியுள்ளது.

முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும், குழந்தைகளும், கர்ப்பிணிதாய்மார்களும், நோயாளிகளும் பேருந்து பயணத்தில் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே நேரடியாக சென்னை செல்வதற்கு ரயில் சேவையினைஉடனடியாகஇயக்க வேண்டும், அப்படி இல்லாதபட்சத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்வதற்கு திருவாரூர் வரைக்கும் இணைப்பு ரயிலினைஉடனடியாக இயக்க வேண்டும். இது போன்ற இணைப்பு ரயில் பல வருடங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியிலிருந்து ரயில் உபயோகிப்பாளர்கள் சென்னை செல்லும் வகையில் இணைப்பு கோச் சென்று மயிலாடுதுறையிலிருந்து சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைத்து பயணிகள் பயனடைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தவழித்தடத்தில் இணைப்பு ரயில் இயக்கப்பட்டதால் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைத்தது என்பதையும் கருத்தில் கொண்டு உடனே சென்னைக்கு இணப்பு இரயில் சேவையினைஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்களின் நலன் கருதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: