கூத்தாநல்லூர் அருகே தொழிலாளிக்கு கத்தி குத்து

மன்னார்குடி, ஜூன் 12: கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட அதங்குடி புதுத்தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சந்திரசேகரன் (38) கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ் (28) என்பவருக்கும் இடையே கிராம கூட்டம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் முருகேஷ் (28), இவரின் தந்தை முருகானந்தம் (42), தாயார் கலா, தம்பி லெனின் ஆகிய 4 பேரும் வேறு சந்திரசேகரன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரி தாக்கி அடித்து உதைத்தனர். அப்போது முருகேஷ் தான் மறைத்து எடுத்து வந்த கத்தியை எடுத்து சந்திரசேகரின் நெஞ்சு மற்றும் முதுகு பகுதிகளில் சரமாரி குத்தினார். இதில் காயமடைந்தவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சந்திரசேகர் கூத்தாநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ கமல்ராஜ் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய முருகேஷ், இவரின் தந்தை முருகானந்தம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கலா, லெனின் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தந்தை, மகன் கைது

Related Stories: