நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை) புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பிரிவின் செயல்பாடு

புதுக்கோட்டை, ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்பொழுது தரை தளத்தில் செயல்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிவின் அலுவலக பணிகளை நேற்று கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கென பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மனு அளிக்க வருபவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கவும், முதியோர் மற்றும் கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பிரிவினை முதியோர் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நேற்று முதல் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பிரிவிற்கு வலதுபுற அறையிலேயே செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மேலாளர் கண்ணா கருப்பையா உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

கொன்னையூர்  துணை மின்நிலைய பகுதிகள்: பொன்னமராவதி, கொப்பனாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், நகரப்பட்டி, கல்லம்பட்டி, வேந்தன்பட்டி, செம்பூதி, செவலூர், கோவணூர், குழிபிறை, செம்பூதி, கொன்னைப்பட்டி, மேலமேலநிலை, மைலாப்பூர். தூத்தூர், காட்டுப்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி. கொன்னையூர் துணை மின்நிலைய பகுதிகள்:இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Related Stories: