தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி முருகன் கோயில் குளத்தை ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு

தரங்கம்பாடி, ஜூன் 7:தரங்கம்பாடி அருகே உள்ள திருவிடைக்கழி முருகன் கோயில் திருக்குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் திருவிடைக்கழியில் சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இது பாவதோஷம் நீக்கும் தலமாக விளங்கி வருகிறது. இக்கோயில் கருவறையில் சிவபெருமானும், முருகனும் இருப்பது சிறப்புக்குரியதாகும். இரண்யாசூரனை வதம் செய்தபின் பாவதோஷம் நீங்க திருக்குரா மரநிழலில் சிவபெருமானை முருகன் பூஜித்ததாக வரலாறு வரலாறு கூறுகிறது. இக்கோயிலுக்கு தினமும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வேன் மற்றும் பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் தண்ணீர் இல்லாமல் ஆகாய தாமரை செடிகள் மண்டிக்கிடக்கின்றன. இக்குளத்தின் தண்ணீர்தான் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீராக பயன்பட்டு வருகிறது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே அரசு உடனே திருக்குளத்தை தூர்வாரி தண்ணீர் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: