ஆந்திராவில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முதல்வர் அதிரடி நடவடிக்கை

திருமலை, ஜூன் 7: ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கையால் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு அமைந்தபிறகு ஏற்கனவே பணியில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, முதல்வரின் தனி ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது முதல்வரின் தனி செயலாளர்களாக இருந்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி 50 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்பியாக நயிஆஸ்மி, ஆக்டோபஸ் கமாண்டோ எஸ்பி விஷால் குன்னி, சிறப்பு புலனாய்வு துறை எஸ்பியாக ரவிபிரகாஷ், சிஐடி டிஐஜியாக திருவிக்ரம் வர்மா, ஏலூரு டிஐஜியாக ஏ.எஸ்.கான், கர்னூல் டிஐஜியாக வெங்கட்ராம ரெட்டி, விஜயநகரம் எஸ்பியாக ராஜகுமாரி, குண்டூர் எஸ்பியாக பி.எச்.வி. ராமகிருஷ்ணா, விசாகப்பட்டினம் துணை ஆணையராக விக்ராந்த் பாட்டீல், விஜயவாடா இணை ஆணையராக நாகேந்திர குமார், ரயில்வே எஸ்பியாக கோயா பிரவீன், புலனாய்வுத்துறை எஸ்பியாக அசோக்குமார், அனந்தப்பூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக கட்டமனேனி னிவாஸ், சித்தூர் எஸ்பியாக வெங்கட அப்பல் நாயுடு ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல், அனந்தப்பூர் எஸ்பியாக இயேசுபாபு, சிஐடி எஸ்பியாக சர்வ சரஸ்தா திரிபாதி, மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள க்ரவுன் குரூப் கமாண்டராக ராகுல்தேவ் சர்மா, விசாகப்பட்டினம் துணை ஆணையாளராக உதயபாஸ்கர் உட்பட 26 பேர் பணியிட மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏ.ஆர் தாமோதர் மற்றும் குண்டூர் புறநகர் எஸ்பி ராஜசேகர பாபு ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: