ஆத்தூரில் ₹4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ஆத்தூர், மே 28: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஏலத்திற்கு பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 மூட்டை பருத்திகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்திருந்தனர். ஆர்சிஹெச் ரகம் குவிண்டால் ₹3100 முதல் ₹6149 வரையிலும், டிசிஹெச் ரகம் ₹4799 முதல் ₹5099 வரையிலும் விற்பனையானது. இதன்மூலம் ₹4 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கடும் வறட்சியால் பருத்தி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பருத்தியின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அதேவேளையில், பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: