எக்ஸல், ஹுண்டாய் தொழிற்பயிற்சி மையம்

குமாரபாளையம், மே 28:  எக்ஸல் ஹுண்டாய் தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற 13 மாணவ மாணவிகளுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியும், ஹுண்டாய் நிறுவனமும் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பயிற்சி மையம் துவங்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியின் இறுதியாண்டு ஆட்டோமொபைல் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தொழில்முறை பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பணிநியமன உத்தரவு வழங்கும் விழா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் மதன்கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சிவகுமார் வரவேற்புரையாற்றினார். வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். ஆர்பிஎஸ்எம் பிரிவு தென்மண்டல கள உதவி அலுவலர் ஸ்ரீவத்சன் கலந்து கொண்டு 13 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஹுண்டாய் நிறுவனத்தின் சென்னை தெற்கு மண்டல தொழில்நுட்ப பயிற்சியாளர் சாம்சில்வர் ஸ்டார் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.  முன்னதாக பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கான வளாகத்தேர்வு நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்ற 13 மாணவ மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டு வேலை நியமன உத்தரவை பெற்றனர். இறுதியில் மெக்கானிக்கல் துறை தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.  

Related Stories: