கொல்லிமலையில் ஆலங்கட்டி மழை

சேந்தமங்கலம், மே 28: கொல்லிமலையில் கத்திரி வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அங்குள்ள சோளக்காடு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில், 27வது கொண்டை ஊசி வளைவு வரையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில், சாலையோர மரங்களின் கிளைகள் முறிந்து குறுக்கே விழுந்தன. இதில் 47வது வளைவில் சென்ற ஒரு சுற்றுலா கார் மீது, திடீரென்று மரக்கிளை முறிந்து விழுந்ததில், கார் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.  இது குறித்த தகவலின் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால், அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: