வெயிலின் தாக்கத்தை தணிக்க ஷவரில் உற்சாக குளியல் போடும் கும்பேஸ்வரர் கோயில் யானை

கும்பகோணம், மே 25:  வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தினம்தோறும் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் ஷவரில் குளித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயிலால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் அடித்து வருகிறது. இந்த வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் யானை வெயிலால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இயற்கை சூழல் நிறைந்த பகுதியான கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ள நந்தவனத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் யானைக்கென பிரத்யேக ஷெட் அமைக்கப்பட்டது. இதில் மங்களம் யானை தினம்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் உற்சாக குளியல் போட்டு வருகிறது.இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில்,  மருத்துவர்கள் உத்தரவின்படி யானைக்கு என்று ஷவர் அமைக்கப்பட்டது. ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் மின்மோட்டார் தண்ணீர் வந்தாலும் தண்ணீர் குறைவாக வருவதால் குழாய் மூலம் தண்ணீர் அடிக்கும்போது யானைக்கு போதுமான அளவுக்கு நிம்மதியான குளியல் இருக்காது. தற்போது கோயிலில் உள்ள ஷவரில் யானையை குளிப்பாட்டி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: