சிதம்பரம் தொகுதியில் திடீர் பிரச்னை முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸ் குவிப்பு

அரியலூர், மே 24: திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும்பணி நேற்று அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் பரபரப்பாக நடைபெற்றது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரசேகர், அமமக வேட்பாளர் இளவரசன், பகுஜன் சமாஜ் சிவஜோதி மற்றும் சுயேட்சைகள் என 13 பேர் போட்டியிட்டனர்.வாக்குகள் எண்ணத்துவங்கி முதல் சுற்றில் திருமாவளவன் முன்னிலை வகித்தார். பின்னர் அடுத்தடுத்து 9 சுற்றுகளி–்ல் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை இருந்து வந்தார். 10வது சுற்று முடிவில் மீண்டும் திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை பெற்றார். இந்நிலையில் 20 சுற்றில் இரண்டு பெட்டிகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் 20வது சுற்று முடிவுகளை அறிவிக்காமலேயே 21 சுற்று வாக்குகளை எண்ணத்துவங்கினர்.

அப்போது அங்கிருந்த வேட்பாளர் திருமாவளவன் 20வது சுற்று வாக்குகளை எண்ணி முடிவினை அறிவிக்கும்படி கூறினார். அதன்படி 20வது சுற்று முடிவில் திருமாவளவன் 7,584 வாக்குகள் முன்னிலை பெற்றார். இதற்கிடையே இந்த தகவல் வெளியில் கசிந்ததால் திருமாவளவன் கட்சி தொண்டர்கள் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்து விடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குகள் எண்ணும் மையத்தின் முன்பாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: