ஞானமணி கல்லூரியில் ஞான் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி

ராசிபுரம், மே 22:  ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனங்களின் சார்பில் ஞான் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல், சேலம் மற்றும் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர்களின் 20 அணிகள் கலந்து  கொண்டன. அவை நான்கு குழுக்களாக பிரித்து சூப்பர்  8 பிரிவுக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. 16 நாட்கள் நடைபெற்ற போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட விளையாட்டு அதிகாரி பெரியகருப்பன்  கலந்து கொண்டார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மாலா லீனா  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

சேலம் பிரீடம் கிரிக்கெட் அணி முதல் பரிசான ₹30 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை வென்றது. சேந்தமங்கலம் செஞ்சுரி கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாமிடம் பிடித்து ₹20 ஆயிரம் பரிசையும், சேந்தமங்கலம் கிரிக்கெட் கிளப் அணி மூன்றாமிடம் பிடித்து ₹10 ஆயிரத்தையும் பெற்றது. மேலும்,  ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி அதிக சிக்ஸ், ஃபோர், அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செஞ்சுரி கிரிக்கெட் அகாடமி அணி வீரர் ஆகாஷ் தொடர்  ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படார். அவருக்கு ₹2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் அரங்கண்ணல், முதன்மை செயல் அலுவலர் விவேகானந்தன், முதன்மை நிர்வாக அலுவலர் பிரேம்குமார், ஞானமணி கல்லூரியின் முதல்வர்கள் கண்ணன்,  காந்தி,  துணை முதல்வர் சந்திரமோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் கொளதம், தங்கதுரை, நாகராஜ், பேராசிரியர்கள் பாராட்டினர்.   

Related Stories: