விருதுநகர் நகராட்சியில் கண்டமான குப்பை தொட்டிகள்

விருதுநகர்,மே 22: விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டிகள், வாகனங்கள் கண்டமாகி நகரின் பல இடங்களில் குப்பையோடு குப்பையாக கிடப்பதை ஏலம் விட ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் நகராட்சிக்கு வர வேண்டிய வரியினங்கள் ரூ.13.5 கோடிக்கு மேல் நிலுவை இருந்த நிலையில், புதிதாக வந்த ஆணையர் பார்த்தசாரதியின் அதிரடி நடவடிக்கையால் சுமார் ரூ.10 கோடி வரையிலான வரி 6 மாதத்திற்குள் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நகரமைப்பு அலுவலர்களுக்கு கவனிப்பு செய்து குறைவான வரி கட்டி வரும் கட்டிடங்களை இனம் கண்டு உரிய வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சிக்கு சொந்தமான கண்டமான வாகனங்கள், குப்பை தொட்டிகள் மற்றும் இரும்பு பொருட்கள் டன் கணக்கில் ராமமூர்த்தி ரோடு பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகம், நகராட்சி குப்பை கிடங்கு, ஆணையர் இல்லத்தின் பின்பகுதியில் குவிந்து கிடக்கின்றன. இவற்றை உடனடியாக ஏலம் விட்டு நகராட்சிக்கான வருமானமாக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மண்ணோடு மண்ணாகி வீணாகி விடுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: